Friday, 12 August 2011

ஆசிரியர்கள் யார்? அவர்களை எவ்வாறு தேர்வு செய்யலாம்?


ஆசிரியர்களின்(அவர்கள் பள்ளி ஆசிரியர்களாக இருந்தாலும் சரி,கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியர்களாக இருந்தாலும் சரிதகுதி வரையறைகள் பற்றி பலகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன.நாட்டின் மிக முக்கியத்துவம் கொண்ட தொழில்களில் ஆசிரியத் தொழிலும் ஒன்றுஏனெனில் பாடப் புத்தகம் என்பதற்கு வெளியே நிதர்சன உலகைக் காட்டிசமூகத்தனமான விஷயங்களை கற்றுக் கொடுத்துஒரு தலைமுறை மட்டுமல்லஒவ்வொரு தலைமுறையையும் உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களையே சார்ந்துள்ளது.
இப்போதுள்ள பெரிய பிரச்சினையே அந்த உன்னத துறையில் இருப்பவர்கள் தகுதியான நபர்கள்தானா?அல்லது புதிதாக அத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் சரியான ஆட்களாஎன்பதுதான்முழு அளவில் தகுதியானவர்கள் கிடைப்பது அபூர்வம்எனவே ஓரளவாவது தகுதி படைத்த நபர்கள் ஆசிரியத் தொழிலுக்கு வர வேண்டுமெனில் என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்ற விவாதம் பல காலமாக இருந்து வருகிறது மற்றும் அதற்காக சில வழிமுறைகளும் பரிந்துரைக்கப்பட்டுபின்பற்றப்பட்டு வருகின்றன.அத்தகைய வழிமுறைகள் தகுதியான ஆசிரியர்களை உருவாக்கப் போதுமானதாஅல்லது இன்னும் சில அம்சங்களை சேர்க்க வேண்டுமாஎன்பதை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையை எடுத்துக்கொண்டால்மேல்நிலைக் கல்வியை முடித்தப்பிறகு வருட டிப்ளமோ(ஆசிரியர் பயிற்சிபடிப்பு இருக்கிறதுபட்டப்படிப்பை முடித்தவுடன் பி.எட்படிப்பு இருக்கிறது.இந்த இருவகைப் படிப்புகளிலும் இன்டர்ன்ஷிப் உண்டுமுதுநிலைப் பட்டம் முடித்திருந்துபி.எட்மற்றும் எம்.எட்முடித்திருந்தால் ஒருவர் பள்ளியின் மேல்நிலைப் பிரிவுக்கு ஆசிரியராக நியமிக்கப்படுவார்.டி.ஆர்.பிஎன்றொரு தேர்வுமுறை பள்ளிக் கல்வி முறையில் இருந்தாலும் அந்தத் தேர்வுமுறை முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லைஅது விஷயத்தில் ஒவ்வொரு அரசும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறதுஒரு அரசு டி.ஆர்.பிதேர்வு வைத்துஅதனடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்தால்,இன்னொரு அரசோசீனியாரிட்டி அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கிறதுபத்தாண்டுகளுக்கு முன்புஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்தவர்களுக்கும் டி.ஆர்.பிதேர்வு நடத்தப்பட்டதுஆனால் தற்போது அது நடத்தப்படவில்லை.
அதேசமயம் மத்திய அரசு பள்ளிகளுக்கு(நவோதயாகேந்திரிய வித்யாலயா போன்றவைஆரம்பநிலை ஆசிரியராக ஆகவேண்டும் என்றாலேஅதற்கு பி.எட்பட்டம் தேவை என்ற நிலை உள்ளதுசில ஆண்டுகளுக்கு முன்புதமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளுக்கு பி.எட்பட்டதாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.ஆனால் அதை எதிர்த்துடிப்ளமோ ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் போராட்டம் நடத்தினார்கள்இது வேலை வாய்ப்பு உரிமைக்கான போராட்டம் என்ற வகையில் போய்விடுகிறது.
கல்லூரி பேராசிரியர் என்ற வகையில்முன்பெல்லாம் முதுநிலைப் பட்டம் படித்திருந்தாலே போதும் என்ற நிலை இருந்ததுபின்னர் எம்.பில்பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி சேர்க்கப்பட்டதுஎம்.பில்.பட்டதாரிகளின் எண்ணிக்கைப் பெருகப் பெருகநெட்\ஸ்லெட் அல்லது பிஎச்.டிகட்டாயம் வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறதுஇந்த தகுதி நிலைகளில்எம்.பில்பட்டதாரிகள் எத்தனை பேர் 'நெட்' தேர்வை தேர்வு செய்கிறார்கள் என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளதுகடின உழைப்பில் ஆர்வமும்தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் மட்டுமே நெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்ற முடிவை எடுக்கின்றனர்அப்படி முடிவெடுப்பவர்களில்விடாமுயற்சியுடனும்நம்பிக்கையுடனும் தொடர்ச்சியாக உழைப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்ஆனால் பொதுவில்கடின உழைப்பை மேற்கொள்ள தயாராக இல்லாதவர்கள்பி.எச்.டி.படிப்பை தேர்வு செய்கிறார்கள்.
எனவே இதுதொடர்பாக குரல் எழுப்பும் ஒரு தரப்பார்'கடின உழைப்பு இல்லாதபணம் செலவழித்துகைடு மனம் கோணாமல் நடந்துகொண்டால் சில வருடங்களில் பெறக்கூடிய பிஎச்.டிபட்டத்தைநெட் தேர்வுக்கு மாற்றாக வைக்கக்கூடாது' என்கின்றனர்ஆனால் இதற்கு பதிலளிக்கும் இன்னொரு தரப்பாரோ'பிஎச்.டி.என்பது எளிதல்லஅதிலும் கடின உழைப்பு உள்ளது' என்கின்றனர்.
இவர்கள் சம்பந்தப்படாத மூன்றாம் தரப்பாரோகடினமாக படித்து நெட் தேர்வில் தேறிஆசிரியராக வருபவர்க்கும்பிஎச்.டிமுடித்து வருபவர்களுக்கும்வகுப்பறையில் சிறப்பாக பாடம் நடத்தும் திறன் அமைந்துவிடுமாஎன்கின்றனர்இதே தரப்பார்தான்பி.எட்., எம்.எட்மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி போன்ற படிப்புகளின் தரத்தையும் கேள்வி எழுப்புகின்றனர்ஒரு தகுதியான ஆசிரியரை உருவாக்க வேண்டுமெனில்வேறு பல சிறந்த பயிற்சிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்பி.எட்.மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி போன்ற படிப்புகளில் இருக்கும் இன்டர்ன்ஷிப் போன்ற பயிற்சிகள் போதாது என்கின்றனர்.
ஆசிரியர்களுக்கு காலத்திற்கேற்ப ஏற்படும் அனுபவங்கள் மட்டுமே போதாது என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.
ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளில் எந்த தொழிலுமே வாழ்க்கைக்கான ஒரு உயிர்வாழ் ஆதாரமாக உள்ளதே தவிரஒரு ஆத்ம திருப்தியான விஷயமாக பெரும்பாலும் இருப்பதில்லைஏனெனில்இந்த உலகில் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையே இருப்பதால்சம்பந்தா சம்பந்தமில்லாதவர்கள்சம்பந்தமே இல்லாத தொழிலுக்கு செல்கிறார்கள்இந்நாட்டில்ஆசிரியர் தொழிலானதுஅத்தகையதொரு மோசமாக ஆக்ரமிப்பில் நெடுங்காலமாகவே சிக்கியுள்ளதுஆசிரியப் பணி என்ற உன்னதப் பணிக்கு சற்றும் சம்பந்தமே இல்லாதவர்கள் இன்று அத்தொழிலின் மாண்பையே கெடுத்து வருகின்றனர்.
இன்று பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், சாதி உணர்வை மாணவர்களிடம் வெளிப்படுத்துபவர்களாகவும்பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும்குடும்ப பிரச்சினையால் உண்டாகும் கோபத்தை சிறிய மாணவ-மாணவிகளின் மீது கடும் வன்முறையாக பிரயோகிப்பவர்களாகவும்சம்பள உயர்வையே குறியாக கொண்டவர்களாகவும்ஒழுங்காக வகுப்பிற்கு வந்து பாடம் எடுக்காதவர்களாகவும்அரசு வேலை தவிர்த்த தனியான வேறு தொழில்களில் முதலீடு செய்துபள்ளியில் முறையாக பணியாற்ற வேண்டுமே என்ற கவனமின்றிதங்களின் தொழிலுக்கே பிரதான முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் உள்ளனர்.
கல்லூரி பேராசிரியர்களை எடுத்துக்கொண்டால், ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர்தனது ஆசிரியப் பணி தவிர்த்துதனியாக வேறு தொழில் நடத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு,பெரும்பாலானோர் தனித் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்ஒரு நாளைக்கு அல்லது மணி நேரம் பணி செய்தால் போதும் என்ற நிலையிருந்தும்அதைக்கூட செய்ய மனமின்றிகல்லூரிக்கே ஒழுங்காக வராமல்,வேறு வேலையில் ஈடுபடுபவர்கள் பலர் உள்ளனர்அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் பலர்யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற நினைப்பில் தங்களின் இஷ்டத்திற்கு நடந்துகொள்கிறார்கள்இலக்கியத் துறை பேராசிரியருக்குஎந்த இலக்கியத் திறனும் இருக்காதுவரலாற்றுத் துறை ஆசிரியருக்கு ஆழமான வரலாற்றுப் பார்வை இருக்காது,அறிவியல் துறை ஆசிரியர்ளுக்கு அத்துறை சார்ந்த உந்துதல்கள் இருக்காதுஆனால் இவர்கள் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பில் இருப்பார்கள்தங்களிடம் ஒத்துப்போகாத மாணவர்களை,பிராக்டிகல் மதிப்பெண் போன்ற விஷயங்களில் பழிவாங்கும் ஆசிரியர்களும் உண்டுகேள்வி கேட்டாலே கோபம் வரும் ஆசிரியர்களும் உண்டுதுடிப்பான மாணவரைக் கண்டாலே எரிச்சலடையும் ஆசிரியர்களும் உண்டு.
எனவே ஆசிரியர்களாக தற்போது பணியில் இருப்பவர்களுக்கு பல்வேறான பயிற்சிகள் தேவைப்படுகின்றன.ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கும் ஒருமுறை மீண்டும் மீண்டும் முறையான திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்பட்டுஅவர்களின் திறன்கள் பட்டைத் தீட்டப்பட வேண்டும்மேலும், கால மாறுதல்களுக்கேற்ப,பலவகை வகுப்பறை சார்ந்த பயிற்சிகளும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்பட வேண்டும்.
அதேசமயம் இனிமேல் புதிதாக இத்துறையில் நுழைபவர்களை வடிகட்ட வேண்டியிருக்கிறதுமிக எளிதான முறையில் பட்டங்களைப் பெற்றுவிட்டுஅதன்மூலம் இடஒதுக்கீடு முறையிலோசீனியாரிட்டி அடிப்படையிலோ ஆசிரியத் தொழிலுக்குள் வரும் முறை தடுக்கப்பட வேண்டும்இல்லையெனில்,பொருத்தமான கைடு பிடித்துபணம் செலவழித்து பிஎச்.டிபட்டம் பெற்று உள்ளே வருபவர்களும் தடுக்கப்பட வேண்டும்.
பள்ளிகல்லூரி என்ற இரு நிலை ஆசிரியர்களுக்கும் 'நெட்' போன்ற கடினமான நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும்அதில் தேறுவதன் மூலம்தான் அவர்கள் உள்ளே நுழையும் நிலை இருக்க வேண்டும்ஏனெனில் இதுபோன்ற நிலை இருக்கும்போதுதான்அத்துறையை மிகவும் விரும்புபவர்கள் மட்டுமே முயற்சி செய்து தேர்வெழுதிஆசிரியர்களாக பணியில் சேர்வார்கள்ஏதோ ஒரு 'வேலை' கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களும்ஆசிரியர் தொழில் அதிக விடுமுறை உள்ள சிரமமற்ற தொழில் என்று நினைப்பவர்களும் ஒதுங்கிக் கொள்வார்கள்அதேசமயம், இப்படி ஒரு விதிமுறையைக் கொண்டு வருவதால்இதுபோன்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கா வண்ணம் அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பலகோடி பேருக்கு கல்வி கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கும் இந்நிலையில்,இதுபோன்ற கடினமான வழிமுறைகளை அமல்படுத்தினால்ஆசிரியத் தொழிலுக்கு கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்படும் என்பது பலரின் நியாயமான கேள்விதான்இந்நிலையைப் போக்க வேண்டுமெனில்,பள்ளி மற்றும் கல்லூரி பாடத் திட்டங்களிலேயே தேவையான மாற்றங்களை செய்துஆசிரியர்களாவதற்கு இயல்பிலேயே ஆர்வம் உள்ள மாணவர்களைதயார் செய்ய வேண்டும்அதன்மூலம் அவர்கள் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பிற சவால்களை எளிதாக சமாளிப்பார்கள்.
மேலும்நுழைவுத்தேர்வு எழுதி தேறினால் மட்டும் போதாதுவகுப்பறையில் அவர்கள் வெற்றிகரமான ஆசிரியர்களாக செயல்படுவதற்கான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்ஆசிரியத் தொழிலானது, ஒரு தியாகமிக்கபேரார்வம் தேவைப்படுகின்றசமூக அக்கறைக் கொண்டஇளைய தலைமுறைகளின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டில் இயற்கையாகவே பற்று கொண்டநன்னடத்தையுள்ளகற்பனை வளமும்தொலைநோக்குப் பார்வையும் கொண்ட, உலகியல் அறிவுகொண்டபொறுமையுள்ளசகிப்புத் தன்மையுள்ளசுயநலமற்ற நபர்களுக்கான ஒரு தொழில்எனவேஇத்தகைய தொழிலுக்கான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் பலவித கடினமான வரைமுறைகள் கடைபிடிக்கப்பட்டால்தான்எதிர்கால தலைமுறைகள் தப்பிப் பிழைக்கும்.