Saturday, 24 December 2011

How to learn? எளிமையாக படிக்கும் முறை!!



PQRST Method

ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிகவும் அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நோக்கில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.
PQRST Method
இந்த பயிற்சி முறையால் மிக எளிதாக உங்களின் நேரங்களை மிச்சபடுத்தலாம்!
Preview: வெள்ளோட்டம்
படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப்பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும். இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு: உயிரியலில் சைட்டோபிளாஸம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாலம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)
Question: வினா எழுப்புதல் (Asking Questions)
பாடச் சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள லைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதர்கான ஆர்வம் அதிகரிக்கும். எதற்காக இதைப் படிக்கிறேன்? அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு: அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)
வாசித்தல் (Read):
அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும். படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புபடுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும். புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதை தவிர்க்க வேண்டும். மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும். இதனால் திருப்பிப் பார்க்கும்போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்குக் கொண்டு வர முடியும்.
Self – Recite : திரும்பச் சொல்லிப் பார்த்தல்
வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.
இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும்.
படித்தவற்றைச் சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.
மேற்கொண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.
Test: மாதிரித் தேர்வு எழுதிப் பார்த்தல்
இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும்.ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாகப் பாடச் சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும். தேர்வு எழுதும் முன் பின்பற்ற வேண்டியவை பதற்றம், அச்சம் ஆகியவற்றை நிதானமாய் இருந்து அகற்ற வேண்டும். சிலவற்றை நம்மால் நினைவுக்கு அழைக்க முடியாது. அது வராது என்ற எண்ணம் முதலில் கூடாது. முயன்றால் முடியாதது இல்லை. எனவே அச்சத்தைத் தவிர்த்துவிட்டு, இயல்பாக எப்பொழுதும் இருப்பது போல் இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் முழு கவனத்தையும் சக்தியையும் செலுத்தி நம் நினைவுக்குக் கொண்டு வந்தால் கண்டிப்பாக நினைவுக்கு வரும்.
தேர்வு எழுதும் பொழுது பதற்றப்படாமல் படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.கருத்துகளை ஒன்ரோடொன்று தொடர்படுத்திக் கொண்டு படிப்பதும் ஒழுங்காகச் சிந்தித்துப் பார்ப்பதும் நினைவுக்கழைப்பதற்குப் பெரிதும் உதவும். ஒரு வினாவிற்கான விடை நினைவிற்கு வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டு இருக்கக்கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். இவை பின்பு, தானாக நினைவிற்கு வரும். அப்பொழுது எழுதிக் கொள்ளலாம்.
நினைவை மேம்படச் செய்வதற்கான வழிகள் கற்க வேண்டும் என்ற உறுதி வேண்டும்.
ஆர்வமும் கவனமும் வேண்டும். பொருத்தமான மனப்பாடம் செய்யும் முறைகளைக் கையாள வேண்டும்.தொடர்புபடுத்திக் கற்றல் வேண்டும். தொகுத்தலும் சந்தமும் (Grouping and Rhythm)உபயோகிக்க வேண்டும்.பல புலனுணர்வுகளைப் பயன்படுத்துதல் சிறந்த சூழ்நிலையில் கற்க வேண்டும். கற்போரைச் சார்ந்து உள்ள அகக்கூறுகள் போதிய அளவு ஓய்வும் மாற்றமும் திரும்பக் கூறலும் பயிற்சியும்.
தேர்வுக்கு முழுவதுமாகத் தயாராகிவிட்டோம் என்று நீங்கள் உணரும் போது உங்கள் பாடத்திட்டத்தின் கேள்வித்தாளுக்கு (இதுவரை பார்த்திராத) விடைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் எழுதிப் பார்க்கவும்.

Monday, 28 November 2011

அறிவியல் பாடத்தை படிக்கும் முறை குறித்த விளக்கம்


 தேர்வு எழுதும் மாணவர்கள் விடை பிரிவை சரியாக குறிப்பிட வேண்டும். விடைகளை அந்தந்த வரிசையிலும், தெளிவாக எழுத வேண்டும். மூன்று மதிப்பெண் வினாக்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் பதிலளிக்க வேண்டும்.
கணக்கு வகையிலான வினாக்களுக்கு, விடைகளை தெளிவாக எழுதுவதுடன், அலகுகளை குறிப்பிட வேண்டும். சூத்திரங்களை எழுதினால், ஒரு மதிப்பெண் கிடைக்கும். வினாத்தாளில் தவறான வினாக்கள் கொடுக்கப்பட்டிருப்பது நன்கு தெரிந்தால் மட்டுமே அந்த வினா எண்ணை குறிக்கலாம். அதற்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும். ஒரு மதிப்பெண் வினாக்களில், மாணவர்களின் மதிப்பெண் சரிகிறது.
புத்தகத்தின் பின்புறத்திலுள்ள வினாக்களை தொகுத்து படிக்க வேண்டும். பழைய தேர்வு வினாக்களை, தேர்வு முறையில் எழுதி பயிற்சி எடுத்தால், 80 சதவீத மதிப்பெண் எளிதில் பெறலாம். படங்கள் வரையும் வினாக்களுக்கு படங்கள் வரைந்து பாகங்களை சரியாக குறிக்க வேண்டும். பாயின்ட் உள்ள கேள்விகள் எழுதினால், கூடுதல் மதிப்பெண் பெறலாம். பத்து மதிப்பெண் வினாவுக்கு முதலில் மையகருத்தை தத்துவமாக எழுதினால், இரண்டு மதிப்பெண் கிடைக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் நேரத்தை சரியாக பிரித்து ஒதுக்கி கொள்ள வேண்டும்.
கடைசி 20 நிமிடங்களை விடைகளை சரிபார்க்கவும், விடுப்பட்ட விடைகளை எழுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.ராஜேந்திரன், வேதியியல் (அரசு மேல்நிலைப்பள்ளி, ஜமீன்ஊத்துக்குளி): வேதியியல் பாடம் முதலில் கடினமாக இருந்தாலும் தொடர்ச்சியாக படித்தால், எளிமையாக மதிப்பெண் பெறலாம். வேதியியல் பாடத்தில் வரையறை, விதிகள் பற்றிய கேள்விகளுக்கு புத்தகத்தில் உள்ளவாறு விடையளிக்க வேண்டும்.
ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு சமன்பாடு கணக்கு கேட்கப்படுகிறது. மின், கனிம மற்றும் இயல்பு வேதியியல் பகுதிகளில் சமன்பாடு கணக்கு கட்டாயமாக இடம்பெறுகிறது. பாட இறுதியில் உள்ள தன்மதிப்பீடு பகுதிகளில் இருந்து 60 சதவீதம் வினாக்கள் கேட்கப்படுவதால், கூடுதல் கவனம் செலுத்தினால் மதிப்பெண்களை தட்டிச்செல்லலாம். கரிம வேதியியலில் கணக்குகளை தனியாக படிக்க வேண்டிய அவசியமில்லை. செயல்விளக்கம் சரிவர தெரிந்திருந்தாலே போதுமானது. கட்டாயமாக சமன்பாடுகளை சமன் செய்தால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். பாடங்களை கவனித்து படித்தால், கட்டாயமாக சென்டம் வாங்க முடியும்.
ஸ்ரீரங்கஜோதி, உயிரியல் (மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள் ளாச்சி): உயிரியல் பாடத்தில் பாடங்களை புரிந்து, பொருளுணர்ந்து படிக்க வேண்டும். தாவர குடும்பங்களின் பெயர்களை சரியாக குறிப்பிட்டால்தான் மதிப்பெண் கிடைக்கும். கேள்விகளுக்கேற்ப, அட்டவணையையும், விளக்கமும் அளிக்க வேண்டும். இதற்கு தனித்தனியாக ஐந்து மதிப்பெண் உண்டு. தாவர உள்ளமைப்பியல், தாவர செயலியல் பகுதிகளில் அதிக வினாக்கள் கேட்கப்படும்.
தாவர செயலியலில் 32 மதிப்பெண்களும், ஆஞ்சியோபெர்ம் பிரிவில் இருந்து 24 மதிப்பெண்களும் வினாக்கள் கேட்கப்படும். சுற்றுச்சூழலில், பயன்பாட்டு உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். படம் வரைய வேண்டிய வினாக்களுக்கு தெளிவாக படம் வரைந்து, பாகம் குறிக்க வேண்டும். சிறிய படங்களை தேர்வு செய்தால், குறுகிய காலத்திற்குள் வரைய முடியும். படத்திற்கு இரண்டரை மதிப்பெண், பாகங்களுக்கு இரண்டரை மதிப்பெண், விளக்கத்திற்கு ஐந்து மதிப்பெண் உண்டு. தாவரவியல் பெயர்களை தெளிவாக எழுதி அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். தொடர்ந்து சில ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்விகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
படம் மற்றும் உட்தலைப்புகள் மிகவும் அவசியம். விலங்கியலில் சுற்றுச்சூழல் கல்வி, பண்பாட்டு கல்வி பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனித உடல் செயலியலில் 10 மதிப்பெண் கேள்வி வரும். ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக நேரத்தை பிரித்து எழுத வேண்டும். இறுதியாக 15 நிமிடங்கள் விடைகளை சரிபார்க்கவும், முக்கிய விடைகளை அடிகோடிடுதல் உள்ளிட்டவற்றுக்காக ஒதுக்க வேண்டும். அப்போதுதான், சதம் அடிக்க முடியும்.
சீனிவாஸ் ரவிகுமார், கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.கே.டி., மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி): கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 150 மதிப்பெண்களையும் எளிதாக பெறலாம். ஒரு மதிப்பெண் பிரிவில் 75 வினாக்களுக்கு ஓ.எம்.ஆர்., சீட்டில் விடையளிக்க வேண்டும். அப்போது, பிழைகளை மீண்டும் திருத்த வாய்ப்பில்லாததால் விடைகளை கவனமாக எழுத வேண்டும். தேர்வுக்கு முன் ஓ.எம்.ஆர்., சீட்டில் விடையளிக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இரு மதிப்பெண் வினாக்களுக்கு துணைத் தலைப்பு அளித்து, இரண்டு பாயின்ட்டுகளாக எழுத வேண்டும்.
புரோகிராம் அவுட் புட் வினாக்களை புரிந்து கொண்டு விடையளிக்க வேண்டும். முழுமையாக தெரியாமல் புரோகிராமிற்கு விடையளிக்கும் போது மதிப்பெண்கள் குறைந்துவிடும். ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு டயலாக் பாக்ஸ், விண்டோஸ் போன்றவற்றை வரைந்து, பாயின்ட்களாக எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும். பாயிண்ட்களுக்கு நம்பர் எழுதாமல், குறியீடுகளை இட வேண்டும். வேறுபாடு அறிதல் கேள்விகளுக்கு அட்டவணையிட்டு பாயின்ட்களை குறிப்பிட வேண்டும்.
ஸ்டேட்மென்ட்டில் பயன்பாடு, வழிமுறை, விரிவாக்கம், உதாரணம் ஆகியவற்றையும், தேவையான இடங்களில் பங்ஷன்ஸ், கீபோர்டு பயன்படுத்தும் விதம் மற்றும் ஷார்ட் கட் கீ ஆகியவற்றையும் குறிப்பிடவும்.
ஒரு பகுதி முழுமையடைந்தவுடன் மறு பகுதி கேள்விகளுக்கு விடையளித்தால், ஆசிரியர்களால் எளிதாக திருத்த முடியும். ஒரு மார்க் வினாக்களை கண்டறிய பாடம் படிக்கும் போதே முக்கியமான பாயின்ட்டுகளுக்கு அடிக்கோடிட்டு படிக்க வேண்டும்

முப்பதுக்குள் வரும் முடிவு......(Thanks to SIster கீதா)


முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் விர்ர்ன்னு இருக்கு’ - இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால்இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர முடியும்.

முதல்வர் ஜெயலிதா கடந்த தனது ஆட்சியில் டாஸ்மாக்கைக் கொண்டு வந்தபோதுஅவரே அது இந்த அளவுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.  இப்போது ஆண்டுக்கு கிட்டதட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தருகிறது டாஸ்மாக்.  இந்த வருமானம்அரசாள்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால்டாஸ்மாக் கடைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைக் கேட்டால்கண்களில் ஓரம் நீர்த்துளிகளே வெளிப்படும். கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக்தான் லட்சக் கணக்கானவர்களின் உடல்நலனைப் பாதித்துஅவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களை நடுவீதியில் நிறுத்தியிருக்கிறது. அதுவும் முப்பது வயதுக்குள்ளேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்புகல்லீரல் பாதிப்புகணையம் செயலிழப்புபக்கவாதம்கிட்னி ஃபெயிலியர் என்று மீள முடியா பெருந்துயரங்களுக்கு ஆளாகிவைத்தியத்துக்கு செலவு செய்ய வழியற்ற நிலையில் இறந்து போகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியும்,சோகமும் கலந்த உண்மை. முப்பது வயதுக்குள் மேற்கண்ட பாதிப்புகள் மிகவும் அரிதாக நடக்கக் கூடியவைதான். ஆனால்கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பாதிப்புகளின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கார்டியாலஜிஸ்ட் ஒருவர்.

கண்ணனுக்கு 27 வயது. சேலம்தான் சோந்த ஊர். இரண்டு ஆண்டுகளாக பொருத்தமான பெண்ணைத் தேடியலைந்துஅபிராமியை நிச்சயம் செய்துவைத்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் நண்பர்கள் ரொம்ப வற்புறுத்தியதால், ‘பார்ட்டி’ வைத்தார். மதுபான பார்ட்டி களை கட்டியபோது,திடீரென்று கண்ணனுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. விடிந்தால் கல்யாணம்என்ன செய்வது? ‘எப்படியோ சமாளிதாலி கட்டியபிறகு டாக்டரிடம் காட்டிக் கொள்ளலாம்’ என்று நெருங்கியவர்கள் அட்வைஸ் செய்யதிருமணம் முடிந்த கையோடு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்த டாக்டர்கள்சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை தரப்பட்டது. நான்கைந்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தன. இருந்தாலும் எந்தப் பலனும் இல்லை. கண்ணனைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் கண்ணனுக்கு ட்ரீட்மெண்ட் செய்த டாக்டர் சுரேந்திரன் நினைவுகளில் பெரும் சோகமாகத் தங்கியிருக்கிறது கண்ணனின் நினைவுகள். "அவருக்கு வந்த பிரச்சினைஅக்யூட் பேங்க்ரியாடிடிஸ் (acute pancreatitis). ரெகுலராக அவருக்கு குடிப்பழக்கம் இல்லை. முதன்முறையாக அன்றுதான் குடிக்கிறார். இந்த அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் முதன்முறையாகக் குடிப்பவர்கள் பலருக்கு வரும் பிரச்சினை. கண்ணனுடன் ஒரு வார்த்தை கூட பேசியிராதமுகத்தைச் சரியாகப் பார்க்கக்கூட அவகாசம் வாய்க்காத அந்தப் பெண், ‘எப்படியாவது காப்பாத்துங்க’  என்று பார்க்கும் டாக்டர்களை எல்லாம் கைகளைக் கூப்பி கெஞ்சியதுதான் இன்னும் என் நினைவுகளில் இருந்து நீங்காமல் தங்கியிருக்கிறது. ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டது" என்கிறார் டாக்டர் சுரேந்திரன் பெருமூச்சுடன்.

ஆண்டுதோறும் மதுகுடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். கூடவே  மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்படுபவர்களின் சதவீதமும் ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு டாஸ்மாக் கடைக்குப் போய்ப்பார்த்தால் ஜேஜே என்று திரண்டிருக்கும் கூட்டத்தில் 20, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கூட்டம்தான் 60 சதவீதம் இருக்கும். "இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் உண்டு.  இத்தகைய மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில்  நன்கு படித்துபன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களும் உண்டு. பொதுவாகபரம்பரை நோய் என்று கூறப்படும் நீரிழிவு போன்ற நோய்கள் இன்று லைஃப் ஸ்டைல் நோய்களாக மாறியுள்ள நிலையில்,உடல் உழைப்பு இல்லாத டெட்லைன்டார்கெட் போன்ற நெருக்கடிகளில் பணிபுரியும் இவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த நிலையில் இவர்கள் மதுப்பழக்கத்தையும் தொடரும்போது கல்லீரல் பாதிப்புகணையம் செயலிழத்தல்கிட்னி சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்ற அதிர்ச்சித்தகவலைத் தருகிறார்டி.டி.கே. மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.

"
கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்தால் இளைஞர்களின் உடல்நலம்  அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்" என்று கூறும் டாக்டர் சுரேந்திரன்குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல்கணையம் பாதிப்பு என்று அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார். மேலும் அதுபற்றிக் கூறும்போது, "1969லிருந்து 77வரை இதே கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பை நாங்கள் முடித்த காலத்தில் acute pancreatitis Severe pancreatitis போன்ற பாதிப்புகள் பற்றி எல்லாம் புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால்,தமிழகத்தில் பார்த்ததில்லை.

ரொம்ப அபூர்வமாக வட இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். அப்படி இருந்தாலும் இவர்களின் இறப்பு சதவீதம் வெறும் 5சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். ஆனால்தற்போது ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சர்வ சாதாரணமாக தினமும் நோயாளிகள் வருவதைப் பார்க்கலாம். தற்போது இறப்பு விகிதம் 70 சதவீதம். அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் மிக அதிகம். ஐ.டி.மென்பொருள் போன்றவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு கல்லீரல்கணையப் பாதிப்பு இன்று சர்வ சாதாரணம். மது குடிப்பது மேற்கத்திய நாடுகளில் கலாசாரத்தோடு இணைந்தது என்பதால் அங்கு பாதிப்புகளும் அதிகமாக இருந்தன. இன்று வரையும் நவீன மருத்துவத்தில் ஜெர்மனி நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சை முறையைத்தான் இங்கும் அளிக்கிறோம். இங்கு ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல வேண்டும்... கடந்த மாதம் கொச்சியில் நடந்த சர்வதேச மருத்துவ மாநாட்டில் ஜெர்மனி டாக்டர்கள் கலந்துகொண்டார்கள். மேற்கத்திய நாடுகளில் தற்போது வியக்கத்தகும் விதமாக மக்களிடம் மதுப்பழக்கம் குறைந்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால்நம் நிலையோ அதற்கு நேரேதிராக உள்ளது" என்று வேதனையுடன் கூறுகிறார் டாக்டர் சுரேந்திரன்.

"
எப்போதாவது குடிக்கிறேன். வாரத்தில் ஒருநாள்தான் குடிப்பேன். பார்ட்டியில மட்டும்தான் குடிப்பேன். அளவான மதுப்பழக்கம் உடலுக்கு நல்லதுபோன்ற எல்லா காரணங்களும் குற்ற உணர்ச்சியில் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள்தானே தவிரஅதில் உண்மையில்லை. ஒரு சொட்டு விஷமாய் இருந்தால் என்னஒரு குடமாய் இருந்தால் என்னவிஷம் விஷம்தான். பீர் மட்டும்தான் குடிப்பேன் என்றும் சிலர் சொல்கிறார்கள். மதுவின் பெயர்கள்தான் வேறு வேறானவையே தவிரஅதனால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் ஒரே ரகமானவையே. சமீபத்தில் தில்லியில் பல வெளிநாட்டு டாக்டர்களும் கலந்துகொண்ட கல்லீரல் நோய்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கில் குடிப்பழக்கம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உடல் உறுப்புகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்று மருத்துவ அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர்.

அடையாறில் உள்ள டி.டி.கே. மருத்துவ மையத்தில் பல ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது. "10 ஆண்டுகளுக்குமுன் இந்த கவுன்சலிங்கில் நடுத்தர வயதுப் பெண்கள்கணவனை இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி மீட்பது என்பதைத் தெரிந்துகொள்ள தவறாமல்  கலந்துகொள்வார்கள். தற்போது இந்த கவுன்சலிங்கில் ஏராளமான நாற்பதுஐம்பது வயது பெற்றோர்கள் கலந்துகொள்கிறார்கள். மிகச் சிறிய வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகரித்து விட்ட அவலம் இது" என்கிறார்,பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர்.

"
குடிப்பழக்கம் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இது உடல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்லமனம் சார்ந்ததும்கூட. கல்லூரி மாணவன் ஒருவன்தற்போது எங்கள் மையத்தில் தொடர் சிகிச்சையில் இருக்கிறான். 20 வயதான அவன்நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தவன்கொஞ்ச நாட்களிலேயே மதுவுக்கு அடிமையாகி விட்டான். குடும்ப கவுரவம் போய்விடுமே என்று பயந்தவர்கள் முதலில் வீட்டில் வைத்து, ‘இது தப்பு’ என்று சொல்லி திருத்தப் பார்த்திருக்கிறார்கள். யாருமே இல்லாத சமயத்தில் அமைதியாக இருப்பவன்வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போதுபயங்கரக் கலாட்டா செய்வதுமிரட்டுவதுகுடிப்பதற்கு பணம் தராவிட்டால் விருந்தினர்களுக்கு தருவதற்கு எடுத்துச் செல்லும் தேநீரைப் பிடுங்கிஎதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது கொட்டுவது என்று  அவன் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்க... இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை தருகிறோம்" என்கிறார் டாக்டர் அனிதா.

"
குடிக்கு அடிமையாகிசிகிச்சைக்குச் சேர்க்கப்படுபவர்களின் ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலைக் குறைக்கவே 3லிருந்து ஐந்து நாட்கள் ஆகும். அதன் பிறகே சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வருவதும் சகஜம். இவர்களின் ரத்தத்தில் ஆல்கஹாலைக் குறைப்பதற்கு 20 நாட்கள் ஆகும். முற்றிலும் மதுவை நிறுத்திதொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே ஓரளவு உடல் நிலை தேறும். ஆனால்அதே நேரம் ஒருமுறை கணையத்தில் பிரச்சினை வந்தால்தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். அதன் பிறகு மதுவையே தொடாவிட்டாலும் சிகிச்சையும் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் தேவை. கணையம் பாதிப்பினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க அரசுக்கு ஆகும் செலவு 50 முதல் 60லட்சங்கள்" என்று கூறுகிறார்அரசு மருத்துவர் ஒருவர்.
இதயநோய் மருத்துவரான டாக்டர் சொக்கலிங்கம், "கடந்த 20 ஆண்டுகளில் ஆண்களிடம் மட்டுமல்லபெண்களிடமும் குடிப்பழக்கம் அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஆல்கஹாலில் உள்ள எத்தனால் உடலில் போய் வளர்சிதை மாற்றம் ஆகும்பொழுது (metabolism)அசிட்டேன்அசிட்டால்டிஹைடு இரண்டும் மூளைகல்லீரல்இதயத் தசைகள் போன்றவற்றைப் படுமோசமாகப் பாதிக்கிறது. இதயத் தசைகள் நாளடைவில் விரிவடைந்து இதயம் பெரிதாகும். 42 ஆண்டுகள் என் மருத்துவ அனுபவத்தில் சமீப காலங்களில் இளைஞர்கள் குடியால் மோசமாகப் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறேன். மது அருந்துபவர்களுக்கு hdl (tri glycerise)  எனப்படும் நல்ல கொழுப்பிற்குப் பதிலாக, hdl 3 எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இதுரத்தக் குழாய்களை அடைத்துஇதயத்திற்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்" என்கிறார்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் மது பாதிப்பால் ஏற்படும் உடல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால்இதனை வேறு விதமாகப் பார்க்கிறார். குடல் இரைப்பைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திர மோகன். "குடியின் பாதிப்பு தற்போது அதிகமாக இருந்தாலும் ஒரே நாளில் திடீரென்று இந்த எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை. வயிற்று வலி என்றால்தெரிந்த டாக்டரிடம் காட்டுவார்கள். இப்போது அதற்கான சிறப்பு மருத்துவரிடம் போக வேண்டும் என்று தெரிந்து வருகிறார்கள். அதனால் குறிப்பிட்ட துறையில் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என்றாலும் எந்த அரசு மருத்துவமனையை எடுத்துக்கொண்டாலும் மதுவினால் பாதிப்பு என்பது அதிகரித்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது" என்கிறார்.

"
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார்கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் இதே அவல நிலைதான். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டுமல்லகுடிக்கு அடிமையாகும் பெண்கள் வட சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வருவதும் சகஜமான ஒன்றுதான்" என்று கூறிவேதனையை அதிகரிக்க வைக்கிறார்கள் அங்கிருக்கும் மருத்துவர்கள்.
மதுப்பழக்கமுள்ளோர் வயது விகிதம்

50+ வயதினர் = 18%
15 - 20 வயதினர் = 10%
30 - 50 வயதினர் = 37%
20 - 30 வயதினர் = 35%

கணையம்: மதுவின் முதல் டார்கெட் கணையம். இதிலிருந்து சுரக்கும் ஜீரண நீர்உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது (TONAR போன்ற அழகு சாதனப் பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்துவது அதன் பரவும் தன்மைக்காகவே). இதுகணைய நீர் வெளிவரும் பாதையைச் சென்று அடைத்துவிடும். இதனால்சுரக்கும் ஜீரண நீர் கணையத்திலேயே தங்கிவிடும். ஜீரணத்திற்காக சுரக்கிற நீர் வெளியேறாமல் அதே இடத்தில் தங்கும்போது கணையம் வீங்கத் தொடங்கும். இதுகழிவு நீர் தேங்குவது போன்றதுதான். இதனால்,கணையத்தில் கிருமிகள் சேர்ந்து அதனை அழுகச் செய்துவிடும். அழுகிய பகுதியை வெட்டி எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. உமிழ் நீர்,இரைப்பையில் சுரக்கும் நீர்கணைய நீர் மூன்றும் செரிமானத்திற்கு உதவுகின்றன. இதில் ஒன்று கெட்டு விட்டதால்உணவு செரிமானம் ஆவது பாதிக்கப்படும்.
இரைப்பை: மதுவில் உள்ள ஆல்கஹால்இரைப்பையின் உட்புறம் உள்ள மிக்கஸ் என்ற மெல்லிய சுவரை அரித்துஅல்சர் வரவழைக்கும்.
கல்லீரல்: உடலின் பெரிய உறுப்பான கல்லீரலில் உள்ள செல்கள்மதுவில் இருக்கும் நச்சு பாக்டீரியாக்களால்  அழிக்கப்படுகின்றன. 80 சதவீதப் பகுதியை வெட்டி எடுத்துவிட்டாலும் வளரும் இயல்பு கொண்டது கல்லீரல். ஆனாலும் அழிந்து போன செல்கள்கல்லீரல் முழுக்க திட்டுத் திட்டாக தழும்புகளாக மாறிவிடும். இதனால்கல்லீரல் வீக்கம்ஹெபாடிடிஸ்சிரோசிஸ் என்று பல பிரச்சினைகள் வரும்.
சிறு மூளை: நம்முடைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது சிறு மூளை. ஆல்கஹால் குடித்தவுடன் நேராக சிறு மூளையைத்தான் பாதிக்கும். குடிப்பவர்களின் கட்டுப்பாடு மொத்தமும் போய்விடும். நேராக நடக்க முடியாது. ஒழுங்காகப் பேச முடியாது. ஆல்கஹாலுக்குப் பரவும் தன்மை அதிகம் என்பதால்வேகமாக ரத்தத்தில் கலந்து உடல் முழுக்கப் பரவும். இதனால்எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா உறுப்புகளும் பாதிக்கும். குறிப்பாகஇனப்பெருக்க்க உறுப்புகள் பாதித்து மலட்டுத் தன்மை அதிகமாகும். கர்ப்பமாக இருக்கும்போதுபெண்கள் மது அருந்தினால் குழந்தைக்கு மனநிலை பாதிக்கும். சீக்கிரத்திலேயே மறதி நோய் (dementia) வரும்.
மது குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலில் 20 சதவீதம்இரைப்பையில் உடனடியாகப் பரவி தங்கிவிடும். மீதி 80 சதவீதம்பெருங்குடலில் தங்கிவிடும். மது குடித்த 20 நிமிடங்களில் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு உயரும். குடித்த மூன்று நாட்களுக்கு உடலில்  சிறுநீரகங்கள்கல்லீரல்,நுரையீரல் என்று அனைத்துப் பாகங்களிலும் ஆல்கஹால் அப்படியே தங்கியிருக்கும்.
எல்லா மது பானங்களைத் தயாரிக்கும்போதும்பார்லிகாய்கறிகள்பழங்கள்தானியங்கள் இவற்றை ஈஸ்ட் சேர்த்து நொதிக்கச் செய்கிறார்கள். அத்துடன் சர்க்கரை சேரும்பொழுது எத்தில் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது. இத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடுசோடியம் சல்பர்,சோடியம் குளோரைடுசோடியம் தியோசல்பர்கால்சியம் கார்பனேட் போன்ற எல்லா வகையான உப்புகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த உப்புகள் ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொள்ளப்படுவதால்கிட்னி உள்ளிட்ட பகுதிகளில் இவை படிந்துதமது விஷம வேலைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.
போலி நம்பிக்கைகள்

இளைஞர்களிடையே ஒரு போலி நம்பிக்கை உள்ளது. மது குடிப்பதற்குமுன் சில மாத்திரைகளை போட்டுக் கொண்டால் சிறுநீரகங்கள்கல்லீரல் பாதிக்காது என்று. ஆனால்யாருக்கும் அது என்ன மாத்திரை என்று தெரியாது. நண்பர்கள்குடிப்பழக்கம் இல்லாதவர்களையும் தங்கள் பார்ட்டியில் சேர்த்துக்கொள்ள வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து ஏமாற்றுவார்கள். ஏமாற வேண்டாம். எந்த முன்னெச்சரிக்கைச் செயலும் மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்காது.
அதேபோல கள்ளு குடிப்பது உடலுக்கு நல்லது என்பதும் உண்மையில்லை. பனையில் இருந்து பெறப்படும் பொருட்கள் இயற்கையானவை என்பதால் அவற்றால்உடல் நலத்திற்கு நல்லது. ஆனால்கள் அப்படியல்ல. புளிக்க வைப்பதால் இதில் பாக்டீரியாக்கள் அதிகம். இது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தவிரகள் என்கிற பெயரில் மாத்திரைகளைப் போட்டும் ஏமாற்றுவார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதி.
வசூல்ராஜா

இந்த ஆண்டு எப்படியும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு. தினமும் சுமார் 38 கோடி ரூபாய் வருவாய் தரும் துறையை உள்ளாட்சித்தேர்தலுக்காக ஐந்து நாட்கள் மூடிவிடப் போவதாக அரசு அறிவித்தவுடன் அதற்கு முந்தைய சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் விற்பனை வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகரித்தது. பிராந்தி,விஸ்கிரம்ஜின் என்று எல்லா வகை மதுபானங்களும் கடை திறந்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் சொன்னார்.
அலைமோதும் கூட்டத்தைப் பார்த்துஎங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்கியவர்களும் இருக்கிறார்கள். சாதாரண நாட்களில் ஒரு குவார்ட்டருக்கு ரூபாய் அதிகம் கொடுத்தவர்கள்அன்று 10 ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள். தமிழகம் முழுக்க அரசுக்குச் சொந்தமான 6,500 மது விற்பனைக் கடைகளில் வேலை செய்யும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கும் அன்று நல்ல வருவாயாம். இப்படி கூடுதலாக வசூலான பணம் மட்டும் ஒரே நாளில் கிட்டதட்ட கோடி ரூபாய்.

Wednesday, 26 October 2011

புகையில்லா புதுவாழ்வு!



http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTv5ejMjBhUFLoYNZ0K9o0VnvI1dj_mztteN8wI7NWshMEO65H4WbpUgWc

 Thanks to :Engr.Sulthan

புகையில்லா புதுவாழ்வு!

டாக்டர் .. லெனின் -

http://www.koodal.com/contents_koodal/health/images/2011/smoking-713.jpg

ஒரு மிதமான பொழுதுபோக்கிற்காக, நண்பர்களுடன் கலந்துரையாடும்போது பிடிப்பதாக இருந்த இந்த வெண்சுருட்டுகள் இன்று அனைத்து தரப்பிலும், பழக்கமாகிப் போய், அதை விட்டொழிக்க முடியாமல் தள்ளாத வயதிலும் தடுமாற்றத்தோடு அதை தவறாமல் புகைத்து வருகிறார்கள்.
புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில் மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு சேர பாதிக்கும். நச்சுகளின் மொத்த நாசகாரக் கலவைதான் இந்த வெண் சுருட்டுகள்!
உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுபடி ஒரு நாளைக்கு 20 வெண் சுருட்டுகள் வீதம், 20 வருடங்களுக்கு தொடர்ந்து புகைத்தால் நுரையீரலில் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் இது பல வருடங்களுக்கு முன்பு வரையறை செய்யப்பட்ட ஒரு கணிப்புதான்! ஆனால் இப்போது காலம் மாறி கிடக்கும்போது, பத்து வருட அளவிலேயே பெரும் கேடுகள் நிகழ்ந்து விடுகின்றன. முதலில் பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்தான். ஒவ்வாமை, தும்மல், சளித் தொந்தரவுகள், இடைவிடா இருமல், இழுப்பு போன்றவை வரும். பிறகு இது ஆஸ்துமாவாக, மூச்சிரைப்பாக மாறும். சிலருக்கு காசநோயும் வரலாம். இவற்றின் தொடர்ச்சியாக நுரையீரல் புற்றுநோயும் வரலாம். இது விளையாட்டான செயல் அல்ல. கடும் விளைவுகளில் சிக்கிக்கொண்டு சிதறுண்டு போவதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்து நம்மை அழித்து விடும். பிறகு பாதிக்கப்படுவது இதயம். இதயத்தின் ரத்தக் குழாயில் நச்சுக்கள் படியும்போது இதயத்தில் சுவர்கள் தடித்து வீங்கி, ரத்தக்குழாயின் அளவு சுருங்கி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.
சுருங்கச் சொன்னால் சுத்தமான குடிநீரில் அசுத்தமான கழிவு நீர் இரண்டறக் கலப்பது போலத்தான் இங்கும் நடக்கிறது. இதயத் தமனியின் வீக்கம், நுரையீரல் நீர்க்கோவை, இதயத் தசைகளின் செயலிழப்பு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் மூச்சு மண்டல - இதய செயலிழப்பும் ஒரு சேர ஏற்பட்டு அது உயிரை உடன் பறித்து விடுகிறது. புகைப்பவர்கள், தேநீர் குடித்துக்கொண்டே புகைக்கும்போது பசி உணர்வு இல்லாமல் போகிறது. இப்படி தொடர்ந்து வினைகள் நடக்கும்போது எதிர்வினையாக குடற்புண்ணும், குடற் சுருக்கமும் ஏற்பட்டு பசி இல்லாமல் போகிறது. இந்நிலை நீடித்தால் குடற்புற்று நோய் வரும். இதில் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை புகையை உள்ளிழுத்து வெளியில் ஊதிய பிறகு மனம் முழுவதாக நிறைவடைவதில்லை. மூளையின் முன் பக்க செல்கள் வேதிப் பொருட்களை தொடர்ந்து சுரந்து மீண்டும், மீண்டும் புகைக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன. இல்லை என்றால் ஒரு விதமான பயம் - பதட்ட உணர்வு நிலைக்கு அழைத்து செல்கின்றன. இந்த நரம்பு சார்ந்த வேதிகளின் அதாவது 'கார்ட்டிசால்', 'அட்ரீனலின்' போன்றவை பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன. இல்லை என்றால் மனம் குழம்பிய நிலையை தற்காலிகமாக தோற்றுவித்து விடுகின்றன. இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாத மனிதன் மீண்டும் அந்த நெருப்பை பற்றவைத்து விடுகிறான். அதே நெருப்பிலேயே வெந்தும் சாகிறான். மன உறுதி, தியானம், உடற்பயிற்சி, மனநல ஆலோசனை, சுயக் கட்டுப்பாடு, யோகா போன்றவற்றால் மட்டும்தான் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும். புகை பிடிக்காமல் இருந்தால் எப்போதும் நிம்மதி கிடைக்கும். அந்த பழக்கத்திற்கு அடிமையானால், அதற்கு என்றென்றும் அடிமைதான். எதற்கும் அடிமையாகாமல் இருக்க புகையில்லா, விழிப்புணர்வு நாளில் புது உறுதி ஏற்போம். புகையை அடியோடு மறப்போம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkAMYSSEQV3-JOD_2IW5s2U5Pm2ng7pwOOLHpf-_t4oaGVNysBFYJC7z64HveSg6hIoEG2apaWYx68cG_sPlcNpLYaeOvazAJY2v8we8p2ueOPX6alTcgdRognUMvrBasSA8Fdekmfy1Cr/s400/kandungan_rokok.gif

Engr.Sulthan
  
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTv5ejMjBhUFLoYNZ0K9o0VnvI1dj_mztteN8wI7NWshMEO65H4WbpUgWc

 

புகையில்லா புதுவாழ்வு!

டாக்டர் .. லெனின் -

http://www.koodal.com/contents_koodal/health/images/2011/smoking-713.jpg

ஒரு மிதமான பொழுதுபோக்கிற்காக, நண்பர்களுடன் கலந்துரையாடும்போது பிடிப்பதாக இருந்த இந்த வெண்சுருட்டுகள் இன்று அனைத்து தரப்பிலும், பழக்கமாகிப் போய், அதை விட்டொழிக்க முடியாமல் தள்ளாத வயதிலும் தடுமாற்றத்தோடு அதை தவறாமல் புகைத்து வருகிறார்கள்.
புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில் மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு சேர பாதிக்கும். நச்சுகளின் மொத்த நாசகாரக் கலவைதான் இந்த வெண் சுருட்டுகள்!
உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுபடி ஒரு நாளைக்கு 20 வெண் சுருட்டுகள் வீதம், 20 வருடங்களுக்கு தொடர்ந்து புகைத்தால் நுரையீரலில் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் இது பல வருடங்களுக்கு முன்பு வரையறை செய்யப்பட்ட ஒரு கணிப்புதான்! ஆனால் இப்போது காலம் மாறி கிடக்கும்போது, பத்து வருட அளவிலேயே பெரும் கேடுகள் நிகழ்ந்து விடுகின்றன. முதலில் பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்தான். ஒவ்வாமை, தும்மல், சளித் தொந்தரவுகள், இடைவிடா இருமல், இழுப்பு போன்றவை வரும். பிறகு இது ஆஸ்துமாவாக, மூச்சிரைப்பாக மாறும். சிலருக்கு காசநோயும் வரலாம். இவற்றின் தொடர்ச்சியாக நுரையீரல் புற்றுநோயும் வரலாம். இது விளையாட்டான செயல் அல்ல. கடும் விளைவுகளில் சிக்கிக்கொண்டு சிதறுண்டு போவதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்து நம்மை அழித்து விடும். பிறகு பாதிக்கப்படுவது இதயம். இதயத்தின் ரத்தக் குழாயில் நச்சுக்கள் படியும்போது இதயத்தில் சுவர்கள் தடித்து வீங்கி, ரத்தக்குழாயின் அளவு சுருங்கி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.
சுருங்கச் சொன்னால் சுத்தமான குடிநீரில் அசுத்தமான கழிவு நீர் இரண்டறக் கலப்பது போலத்தான் இங்கும் நடக்கிறது. இதயத் தமனியின் வீக்கம், நுரையீரல் நீர்க்கோவை, இதயத் தசைகளின் செயலிழப்பு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் மூச்சு மண்டல - இதய செயலிழப்பும் ஒரு சேர ஏற்பட்டு அது உயிரை உடன் பறித்து விடுகிறது. புகைப்பவர்கள், தேநீர் குடித்துக்கொண்டே புகைக்கும்போது பசி உணர்வு இல்லாமல் போகிறது. இப்படி தொடர்ந்து வினைகள் நடக்கும்போது எதிர்வினையாக குடற்புண்ணும், குடற் சுருக்கமும் ஏற்பட்டு பசி இல்லாமல் போகிறது. இந்நிலை நீடித்தால் குடற்புற்று நோய் வரும். இதில் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை புகையை உள்ளிழுத்து வெளியில் ஊதிய பிறகு மனம் முழுவதாக நிறைவடைவதில்லை. மூளையின் முன் பக்க செல்கள் வேதிப் பொருட்களை தொடர்ந்து சுரந்து மீண்டும், மீண்டும் புகைக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன. இல்லை என்றால் ஒரு விதமான பயம் - பதட்ட உணர்வு நிலைக்கு அழைத்து செல்கின்றன. இந்த நரம்பு சார்ந்த வேதிகளின் அதாவது 'கார்ட்டிசால்', 'அட்ரீனலின்' போன்றவை பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன. இல்லை என்றால் மனம் குழம்பிய நிலையை தற்காலிகமாக தோற்றுவித்து விடுகின்றன. இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாத மனிதன் மீண்டும் அந்த நெருப்பை பற்றவைத்து விடுகிறான். அதே நெருப்பிலேயே வெந்தும் சாகிறான். மன உறுதி, தியானம், உடற்பயிற்சி, மனநல ஆலோசனை, சுயக் கட்டுப்பாடு, யோகா போன்றவற்றால் மட்டும்தான் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும். புகை பிடிக்காமல் இருந்தால் எப்போதும் நிம்மதி கிடைக்கும். அந்த பழக்கத்திற்கு அடிமையானால், அதற்கு என்றென்றும் அடிமைதான். எதற்கும் அடிமையாகாமல் இருக்க புகையில்லா, விழிப்புணர்வு நாளில் புது உறுதி ஏற்போம். புகையை அடியோடு மறப்போம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkAMYSSEQV3-JOD_2IW5s2U5Pm2ng7pwOOLHpf-_t4oaGVNysBFYJC7z64HveSg6hIoEG2apaWYx68cG_sPlcNpLYaeOvazAJY2v8we8p2ueOPX6alTcgdRognUMvrBasSA8Fdekmfy1Cr/s400/kandungan_rokok.gif

Engr.Sulthan